உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அழகேசன் நகரில் சிறுபாலம் கட்டும் பணிகள் துவக்கம்

 அழகேசன் நகரில் சிறுபாலம் கட்டும் பணிகள் துவக்கம்

செங்கல்பட்டு: அழகேசன் நகர் பிரதான சாலையில், சிறுபாலம் கட்டும் பணிகள் துவங்கி உள்ளன. செங்கல்பட்டு நகராட்சி வேதாசலம் நகரில், அழகேசன் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன், சிறுபாலம் கட்டப்பட்டது. இந்த சிறுபாலம் வலுவிழந்து உள்ளதால், மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து, சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். அத்துடன், இதே பகுதியில், தேவராஜனார் தெருவில் மழைநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, நகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பின், சிறுபாலம் மற்றும் மழைநீர் கால்வாய் கட்ட, 13 லட்சம் ரூபாயை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் பணிகளை துவக்கி உள்ளனர். 'சிறுபாலம் மற்றும் மழைநீர் கால்வாய் கட்டும் பணிகள் ஒரு மாதத்தில் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வரும்' என, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி