மெட்ரோ ரயில் பணிகளுக்கு ரூ.168 கோடியில் ஒப்பந்தம்
சென்னை, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட வழித்தடம், 5ல், மாதவரம் பால்பண்ணை நிலையம் முதல் கோயம்பேடு நுாறடி சாலை நிலையம் வரை, 10 உயர்மட்ட நிலையங்கள் மற்றும் ஆறு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம், 'ஏசி' உள்ளிட்ட மின் வசதிகள் மற்றும் இயந்திர அமைப்புகளை அமைக்கும் வகையில், ஜாக்சன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு, 168.16 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, ஜாக்சன் லிமிடெட் நிறுவன துணை தலைவர் அங்கூர் கோயல் ஆகியோர், 168.16 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவன ஆலோசகர்கள் ராமசுப்பு, நடராஜன், கூடுதல் இணை பொது மேலாளர் அபித் அலி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.