உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சங்குதீர்த்தகுளம் விளக்க பதாகை மர்மநபர்கள் அகற்றியதால் சர்ச்சை

சங்குதீர்த்தகுளம் விளக்க பதாகை மர்மநபர்கள் அகற்றியதால் சர்ச்சை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. அதன் தீர்த்தமாக, சங்குதீர்த்தகுளம் உள்ளது.கோவில் உள்ள மலைக்குன்றின் மூலிகைகள், மழைநீர் வாயிலாக குளத்தில் கலப்பதால், குளத்தில் நீராடுவோரின் சித்த பிரமை நீங்குவதாக நம்பிக்கை.மேலும், கடலின் உப்புநீரில் தோன்றக்கூடிய சங்கு, இறை அதிசயமாக, இக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுகிறது.குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னி ராசிக்கு பெயரும் நாளில், குளத்தில் லட்சதீப விழா கொண்டாடப்படுகிறது.இச்சிறப்புகளை வெளியூர் பக்தர்கள் அறிவதற்காக, அதுகுறித்து விவரிக்கும் பதாகையை, ஆன்மிக ஆர்வலர்கள் அமைத்திருந்தனர்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், மர்மநபர்கள் அதை கிழித்து அகற்றியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, போலீஸ் எஸ்.பி., மற்றும் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு, பதிவுத் தபாலில் புகார் அனுப்பியுள்ளதாக, ஆன்மிக ஆர்வலர் வேலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை