மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
07-Nov-2024
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த நரப்பாக்கம் ஊராட்சியில், அகத்தீஸ்வரமங்கலம் பகுதியில், ஊரக வளர்ச்சித் துறைக்கு உட்பட்ட சித்தேரி உள்ளது.இந்த ஏரியின் ஒரு பகுதியில், புதிதாக நீராதார குளம் ஏற்படுத்த, அத்துறை முடிவெடுத்தது. தன்னார்வ நிறுவனமான தேசிய வேளாண் நிறுவனம் சார்பில், தனியார் நிறுவன நிதியுதவில், தற்போது குளம் உருவாக்கப்பட்டுள்ளது.சுமார், 4,500 கன மீட்டர் கொள்ளளவு மற்றும் ஐந்தடி ஆழம் கொண்ட இக்குளத்தில், படித்துறை, நீர் வரத்து, நீர் வெளியேற்ற கான்கிரீட் கால்வாய், பக்கவாட்டு கான்கிரீட் தளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.மீன்வளத்துறை சார்பில், நாட்டு இன மீன் குஞ்சுகள், குளத்தில் விடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
07-Nov-2024