மேலும் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
03-Jun-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 60 மாற்றுத்திறனாளிகள், குடும்பத்துடன் மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார், குற்றாலம் ஆகிய இடங்களுக்கு, கலாசார சுற்றுலா செல்கின்றனர்.இவர்கள் செல்லும் சுற்றுலா பேருந்தை, செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்கினார். இதில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.மாவட்டத்தில் முதல் முறையாக, மாற்றுத்திறனாளிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவதாக, மாற்றுத்திறனாளிகள் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
03-Jun-2025