ப்ரீ பயர் விளையாடிய வாலிபருக்கு வெட்டு
மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் என்பவரது மகன் பாலா,18.நேற்று மாலை 5:15 மணியளவில் இவர், அதே பகுதியில் உள்ள தாலிமங்கலம் சாலையில், நண்பர்கள் நான்கு பேருடன் மொபைல் போனில்,'ப்ரீ பயர்' விளையாடினார்.அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாபு,45, என்பவர், வீட்டின் அருகில் வந்து ஏன் விளையாடுகிறீர்கள் எனக் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.பாலா உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து செல்ல முயன்ற போது, மது போதையில் இருந்த பாபு, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.இதனால், இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் முற்றி, பாபு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, பாலாவின் இடது பக்க தலையில் வெட்டி உள்ளார்.பாலாவின் நண்பர்கள், அருகில் இருந்த கல்லை எடுத்து பாபுவை தலையில் தாக்கியதில், அவருக்கும் காயம் ஏற்பட்டது.அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று, பாலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.