உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இன்று சைக்ளோத்தான் போட்டி இ.சி.ஆரில் வாகனங்களுக்கு தடை

இன்று சைக்ளோத்தான் போட்டி இ.சி.ஆரில் வாகனங்களுக்கு தடை

மாமல்லபுரம்:கானத்துார் - மாமல்லபுரம் இடையே, இ.சி.ஆர்., எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையில், இன்று நடத்தப்படும் சைக்ளோத்தான் போட்டிக்காக, காலை, 4:30 - 9:30 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன், ெஹச்.சி.எல்., தனியார் நிறுவனம் இணைந்து, சென்னை சைக்ளோத்தான் போட்டியை, கிழக்கு கடற்கரை சாலையில் நடத்துகிறது. இப்போட்டி இன்று அதிகாலை சென்னை அடுத்த, கானத்துார் பகுதியில் துவங்கி மாமல்லபுரம் வரை நடக்கிறது. கானத்துார் - மாமல்லபுரம் - கானத்துார், 55 கி.மீ., கானத்துார் - வடநெம்மேலி - கானத்துார், 24 கி.மீ., கானத்துார் - கோவளம் - கானத்துார் 12 கி.மீ., துார போட்டிகளில், வீரர்கள் சைக்கிளில் செல்வர். இதையடுத்து, கானத்துார் - மாமல்லபுரம் இடையே, இன்று காலை, 4:30 - 9:30 மணி வரை, கிழக்கு கடற்கரை சாலையில், வாகன போக்குவரத்து தடை செய்யப்படுவதாக, போலீசார் அறிவித்துள்ளனர். சென்னையில் இருந்து, மாமல்லபுரம், புதுச்சேரி செல்லும் வாகனங்கள், சென்னை அக்கரை சந்திப்பில் இருந்து, பழைய மாமல்லபுரம் சாலை வழியாகவும், புதுச்சேரியில் இருந்து, சென்னை வரும் வாகனங்கள், மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலை வழியாகவும் செல்லும்படியும் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை