உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் குழாய்கள் சேதம் ஊரப்பாக்கத்தில் தவிப்பு

குடிநீர் குழாய்கள் சேதம் ஊரப்பாக்கத்தில் தவிப்பு

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரியா நகர் விரிவு மூன்று மற்றும் விரிவு ஐந்து பகுதியில், அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன.இங்கு உள்ள மக்களுக்கு, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், குழாய் இணைப்புகள் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.இது குறித்து, அப்பகுதிவாசிகள் தெரிவித்த புகாரின் அடிப்படையில், ஊராட்சி ஊழியர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த குழாய்கள் சேதமடைந்ததை தொடர்ந்து, குடிநீர் வரவில்லை என்பதை கண்டறிந்தனர்.அதைத் தொடர்ந்து, இன்று வரை சேதமான குழாய் இணைப்புகள் மாற்றப்படவில்லை. இதனால், குடிநீருக்காக, இப்பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர். சேதமடைந்த குழாய் இணைப்புகளை உடனடியாக மாற்றி, சீராக குடிநீர் வினியோகம் வழங்குவதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி