உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேலக்கோட்டையூர் பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு

மேலக்கோட்டையூர் பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் பரபரப்பு

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூர் ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. இந்த பெரிய ஏரி அருகே ஊராட்சி சார்பில், மூன்று குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பெய்து வரும் பருவ மழையால், ஏரியில் நீர் நிரம்பி வருகிறது.இரு நாட்களாக ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், அங்கு துர்நாற்றம் வீசி, சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:கடந்த 8 ஆண்டுக்ளுக்கு முன், இங்கு தமிழ்நாடு காவல் துறையினருக்கு சொந்தமாக வீடு கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என, 3,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், முறையாக சுத்திகரிக்கப்படாமல் கால்வாய் வாயிலாக, அருகில் உள்ள இந்த பெரிய ஏரியில் கலக்கிறது.இதனால், ஏரி முழுதும் ரசாயன நுரையாகவும், பாசிகள் படர்ந்து பச்சை நிறமாக தண்ணீர் மாறியுள்ளது. இதன் காரணமாக, ஏரி நீர் மாசடைந்து உள்ளது.தற்போது ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதற்கு காரணம் தெரியவில்லை. கழிவுநீர் கலப்பால் மீன் இறந்திருக்கலாம். இந்த நீரை அருந்தும் பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சம்மந்நதப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரி நீரை சோதனை செய்ய வேண்டும். மேலும், கழிவுநீர் கலப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி