உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலையோரத்தில் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்

 சாலையோரத்தில் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம்

சிங்கபெருமாள் கோவில்: அனுமந்தபுரம் சாலையிலுள்ள காய்ந்த மரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தென் மேல்பாக்கம், அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த சாலை வழியாக செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில், தென் மேல்பாக்கம் -- சிங்கபெருமாள் கோவில் இடையே, சாலையின் இருபுறமும் காப்புக்காடுகள் உள்ளன. இதில், கொண்டமங்கலம் மற்றும் அஞ்சூர் பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் காய்ந்த மரங்கள் உள்ளன. இதனால், இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், மரம் முறிந்து தங்களின் மீது விழுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, இந்த காய்ந்த மரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை