உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வழங்க முடிவு

சுகாதார பணியாளர்களுக்கு சீருடை வழங்க முடிவு

செங்கல்பட்டு,நகராட்சியில் பொது சுகாதாரப்பிரிவில் பணிபுரிபவர்களுக்கு, சீருடைகள் வாங்க நகரமன்றம் அனுமதி வழங்கியது.செங்கல்பட்டு நகராட்சி பொது சுகாதாரப்பிரிவில், துாய்மை பணியாளர்கள், ஓட்டுநர் மற்றும் துாய்மை பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு, ஆண்டுதோறும், சீருடை, காலணிகள், கையுரை, டவல், ஒளிரும் சட்டை வழங்கப்பட்டு வருகிறது.இதேபோன்று, இந்த ஆண்டு, சுகாதாரப்பிரிவில் உள்ளவர்களுக்கு, சீருடைகள் உள்ளிட்டவை வாங்க, 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவர்களுக்கு, சீருடைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை