உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜெட்ராடிங் கொள்முதல் தாமதம் மாமல்லையில் சுகாதார சீர்கேடு

ஜெட்ராடிங் கொள்முதல் தாமதம் மாமல்லையில் சுகாதார சீர்கேடு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 2016ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.வீடுகள், கடைகள், விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு, முன்வைப்புத் தொகை, மாத வாடகை அடிப்படையில், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படுகிறது. இப்பகுதி கழிவுநீரை பூஞ்சேரி பகுதிக்கு அனுப்பி சுத்திகரிக்கப்படுகிறது.பாதாள சாக்கடை அமைத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாய் வாரியம், அதை முறையாக அமைக்கவில்லை. நிலத்தடி குழாய்களை, மேற்பகுதியில் குறுகியதாக அமைத்தது. ஆள் நுழைவு மூடிகளையும் தரமாக அமைக்கவில்லை.இதனால், அடிக்கடி கழிவுநீர் வெளியேறி, சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு, இப்பகுதிவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுக்கிறது.அடைப்பை நீக்குவதற்காக, ஜெட்ராடிங் இயந்திரம், கழிவுநீர் டேங்கர் ஆகியவற்றுடன் உள்ள லாரி வாங்க, பேரூராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.ஆனால், அவற்றை வாங்குவதில் தாமதமாகும் நிலையில், குழாய் அடைப்பை சரிசெய்ய இயலவில்லை. அதனால், பிரதான சாலைகளில் கழிவுநீர் தொடர்ந்து பெருக்கெடுக்கிறது.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் அழுத்தமாக முறையிட்டால், தாம்பரம் மாநகராட்சியின் ஜெட்ராடிங் இயந்திர லாரியை வரவழைத்து, அடைப்பு அப்போதைக்கு நீக்கப்படுகிறது.அங்கிருந்தும் அடிக்கடி வரவழைக்க இயலாத சூழலில், கழிவுநீர் பெருக்கெடுத்து சுகாதார சீர்கேடு அதிகரிக்கிறது. எனவே, பேரூராட்சிக்கென தனி ஜெட்ராடிங் இயந்திர லாரி வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ