உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர்- - சூணாம்பேடு இடையே அரசு பேருந்து இயக்க வலியுறுத்தல்

செய்யூர்- - சூணாம்பேடு இடையே அரசு பேருந்து இயக்க வலியுறுத்தல்

செய்யூர்:செய்யூர் - -சூணாம்பேடு இடையே அரசு பேருந்து இயக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.செய்யூர் பகுதியில் இரும்பேடு, நாங்கொளத்துார், வெடால், கடுக்கலுார், ஒத்திவிளாகம், வில்லிப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.செய்யூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இப்பகுதியில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.ஆனால், செய்யூர் - -சூணாம்பேடு இடையே, வெடால் வழியாக அரசு பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.இந்நிலையில் தற்போது, செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்பட உள்ளதால், இப்பகுதியில் இருந்து அதிக அளவில் கல்லுாரி மாணவர்கள் செய்யூர் செல்ல வாய்ப்பு உள்ளது.எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, செய்யூர் - -சூணாம்பேடு இடையே அரசு பேருந்து வசதி ஏற்படுத்த, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை