கயப்பாக்கம் அரசு பள்ளிக்கு காவலர் நியமிக்க வலியுறுத்தல்
சித்தாமூர்:கயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் இரவு நேரத்தில் 'குடி'மகன்களின் கூடாரமாக மாறி வருவதால், இரவு நேரக்காவலர் நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு இரவு நேரக்காவலர் இல்லாததால், இரவில் 'குடி'மகன்கள் பள்ளி வளாகத்தில் நுழைந்து மது அருந்தி செல்கின்றனர். அங்கு மதுபாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் கயப்பாக்கம் அரசு பள்ளிக்கு இரவு நேரக்காவலர் நியமிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.