செங்கையில் டாஸ்மாக் கடைகள் இடம் மாற்ற வலியுறுத்தல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள, டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை அருகாமையில், மூன்று டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இச்சாலை வழியாக தினமும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன வேலை என, ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடைக்கு செல்லும் குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சாலையிலேயே குடித்து, குடிமையமாக மாற்றி வருகின்றனர். மாலை பணி முடித்து, இவ்வழியாக செல்லும், பெண்களிடம் குடிமன்கள் தகராறில் ஈடுபடுகின்றனர்.மேலும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணிவரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன்கருதி, டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.