மேலும் செய்திகள்
டவுன் பஸ் சக்கரம் ஏறி வாலிபர் பலி
25-Oct-2024
ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
03-Nov-2024
திருக்கழுக்குன்றம்:கன்னியாகுமரி மாவட்டம், கல்லுக்குளியைச் சேர்ந்தவர் சகாய நிவின் ரோஜர், 23. திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லுாரியில் இறுதியாண்டு மாணவர். கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார்.நேற்று முன்தினம் மாலை, பிற நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அறைக்கு சென்றார். இரவு 8:00 மணிக்கு, நண்பர்கள் அவரை பார்க்க சென்றபோது, அறைக்கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது.கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் துாக்கிட்டு தொங்கினார். அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.அவரின் உறவினர் செபாஸ்டின், திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Oct-2024
03-Nov-2024