உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேவநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

தேவநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

சிங்கபெருமாள் கோவில்,:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கிராமத்தில், 750 ஆண்டுகள் பழமையான தேவநாத பெருமாள் - ஹேமாபுஜ நாயகி தாயார், யோக ஹயக்ரீவர் கோவில் உள்ளது.கல்விக் கடவுள் யோக ஹயக்ரீவர் என்பதால் தாம்பரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.தேர்வு நேரங்களில், மாணவர்களுக்கு தனியாக சிறப்பு யாகம் நடத்தப்படுவது, இக்கோவிலின் தனிச் சிறப்பு.இக்கோவிலில் திருப்பணிகள் செய்ய, 2023ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, உற்சவரை தனியாக வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.தொடர்ந்து, உபயதாரர்கள் நிதி வாயிலாக கட்டுமான பணிகள், கோபுரத்திற்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அஷ்டபந்தன ஜீர்னோத்தாரண மஹா கும்பாபிஷேகம், நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக, நேற்று முன்தினம் புன்யாஹவாசனம், கும்பாராதனம், கோ பூஜை, இரண்டாம் கால யக்ஞங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன.நேற்று காலை விஸ்வரூபம், அக்னி ப்ரணயனம், விஷேச ஹோமங்கள் நடைபெற்று, யாத்ரா தானம் நடைபெற்றது.இதையடுத்து, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.இதில் குறு, சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ