பம்மல்:'தினமலர் கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சியில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை, உற்சாகத்துடன் பங்கேற்று அரங்கம் அதிர கொண்டாடி மகிழ்ந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் வகையில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் 'கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம்' என்ற நிகழ்ச்சி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
Galleryஅந்த வரிசையில், பம்மல் அடுத்த சங்கர் நகரில் உள்ள 'தி ப்ளூமிங்டேல்' அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து, 'ஹூண்டாய், 'டயா பூஸ்ட்டர், கிட்டீ பட்டீ, மயில் மார்க் பூஜா மற்றும் ஹோம் கேர் ப்ரோடக்ட், பெப்ஸ், ரூரா ஹாலிடேஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் கைகோர்த்தன. நேற்று மாலை துவங்கிய நிகழ்ச்சியில், குடியிருப்பின் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை, 500க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்ச்சி நடந்த வளாகத்தில் கார் விற்பனை, ஆடை விற்பனை, இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்கள், ஐஸ் கிரீம் உள்ளிட்டவற்றின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளுக்கான ஜம்பிங் பலுான், பலுான் ஷூட்டிங், சிறுவர் ஸ்கூட்டர் சவாரி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் இடம் பெற்றன. மினி மாரத்தான், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மேஜிக் ஷோ, கோலப் போட்டி, ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் டயா பூஸ்ட்டர் நிறுவனம், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, இலவசமாக வழங்கியது. கொண்டாட்ட நிகழ்ச்சிகளால், இரவு வரை குடியிருப்பு வளாகமே உற்சாகத்தில் அதிர்ந்தது. இந்த நிகழ்ச்சி தொடர்பாக, எங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வந்தாலும், இன்று காலை 'தினமலர்' நாளிதழை படித்த போது, எங்கள் குடியிருப்பு குறித்து செய்தி வந்ததை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு போட்டியும், மனதிற்கும், உடலுக்கு பயனுள்ளதாக இருந்தன. - வி.ராமகிருஷ்ணன், 63 நீண்ட நாட்கள் கழித்து கோலம் போட்டது, மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியை, பள்ளி காலத்திற்கு பிறகு, இப்போது தான் அனுபவித்தோம். - எஸ்.சுபா, 21 இந்த குடியிருப்புக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. பள்ளியில் படிக்கும் போது, இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். அதன்பின், தற்போது, 'தினமலர்' நடத்திய கொண்டாட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றோம். - பி.பிரீத்தி, 27