உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை சுகாதாரமின்றி உள்ளதால் அவதி

மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை சுகாதாரமின்றி உள்ளதால் அவதி

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கத்தில், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை சுகாதாரமின்றி இருப்பதால், தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது.அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே, 2012ம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை கட்டப்பட்டது.இந்த கழிப்பறையில் தற்போது, போதிய அளவு தண்ணீர் வசதி இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.கழிப்பறை கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, மழைக்காலத்தில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.மேலும், இந்த கழிப்பறை பேருந்து பயணியர் நிழற்குடை அருகே இருப்பதால், பயணியர் துர்நாற்றத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் இந்த கழிப்பறையை சுத்தம் செய்து, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ