உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  காதலியுடன் தகராறு: வாலிபர் தற்கொலை

 காதலியுடன் தகராறு: வாலிபர் தற்கொலை

தாம்பரம்: தாம்பரத்தில், காதலியுடன் ஏற்பட்ட பிரச்னையில், நீட் தேர்வுக்கு படித்து வந்த வாலிபர், மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் ஆருண் பாஷா, 22; டிப்ளமா இன் பார்மஸி படித்துள்ளார். இவர், மேற்கு தாம்பரம், கோகுல் நகரில் உள்ள தன் சகோதரர் பாரத்துடன் தங்கி, நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அப்போது, சஹானா என்ற பெண்ணுடன், ஆருண் பாஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை, ஆருண் பாஷா, தன் மொபைல் போனில் சஹானாவுடன் பேசியுள்ளார். அப்போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் மனமுடைந்த அவர், தான் தங்கியிருந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை