உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாலை நேரத்தில் சாலை ஓரம் வைக்கப்படும் தற்காலிக காய்கறி கடைகளால் இடையூறு

மாலை நேரத்தில் சாலை ஓரம் வைக்கப்படும் தற்காலிக காய்கறி கடைகளால் இடையூறு

திருப்போரூர்:சாலையோரம் உள்ள காய்கறி கடைகளால் போக்குரவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, சமுதாய கூடம் அருகே காலியிடம் உள்ளது. இந்த காலியிடம் மற்றும் காலி இடத்தை ஓட்டி உள்ள சாலை ஓரத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் மாலை நேரத்தில் தற்காலிக காய்கறி கடை சந்தை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.இக்கடைகளுக்கு பைக், கார் போன்ற வாகனங்களில் வரும் பொதுமக்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு காய்கறிகளை வாங்குகின்றனர்.அப்போது, அந்த வழியாக செல்லும் மற்ற வாகனங்களுக்கு, சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு ஏற்படுகிறது.அதேபோல், அங்கு வைத்திருக்கும் காய்கறிகளை சாப்பிட வரும் கால்நடைகளை வியாபாரிகள் உடனே துரத்தும்போது அந்த கால்நடைகள் திடீரென சாலை குறுக்கே ஓடுகின்றன. அந்த நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கால்நடை மீது மோதி விபத்தில் சிக்கும் சூழலும் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.ஏற்கனவே, அங்கு சாலை குறுகியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, காவல் துறையினர் வாகனங்கள் நிறுத்தி கடைகளுக்கு வரும் வகையில் சாலையோரம் இடைவெளிவிட்டு கடைகள் அமைக்க வேண்டும் அல்லது மாற்று இடம் ஒதுக்கி அங்கு கடையை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ