உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  டிவிஷன் கால்பந்து மீண்டும் ஒத்திவைப்பு

 டிவிஷன் கால்பந்து மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை. டிச. 8-: டிவிஷன் கால்பந்து போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி போட்டிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு கால்பந்து சங்கம் மற்றும் சென்னை கால்பந்து சங்கம் இணைந்து நடத்தும் பிரதான போட்டியான 'சென்னை சூப்பர் லீக் கால்பந்து' போட்டி, ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் துவங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறும். இதில், 500க்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடத்தப்படும். அந்த வகையில், அக்டோபர் மாதம் துவங்க வேண்டிய நடப்பாண்டிற்கான டிவிஷன் கால்பந்து போட்டிகள், மழை காரணமாக இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப் பட்டன. இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், மழை வெள்ளத்தால் மைதானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழக சீனியர் அணிக்கான பிரதான வீரர்கள், இந்த போட்டியில் இருந்து தான் அடையாளம் காணப்பட்டு தேர்வு செய்யப்படுவர். தற்போது போட்டிகள் துவங்காததால் வீரர்கள் சோர்ந்து காணப் படுகின்றனர். இந்த மாதம் 15ம் தேதிக்கு பின், இந்த போட்டி துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை கால்பந்து சங்கம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை