உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்

தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம்

திருப்போரூர்:தி.மு.க., திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சி, சமுதாய நலக்கூடத்தில், பாக முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம், நடந்தது.இதில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலர், ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் சட்டசபை தொகுதி பார்வையாளர் அண்ணாதுரை பங்கேற்றார்.கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி, பாக முகவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் 2026 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதிக்கு உட்பட்ட கேளம்பாக்கம் பகுதியில் தி.மு.க., வேட்பாளருக்கு அதிகமான ஓட்டுகளை பெற உழைக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதல்வராக்க உழைக்க வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி