உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும்

நாய்கள் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும்

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பெரிய நத்தம், வேதாச்சலம் நகர், பழைய ஜி.எஸ்.டி., சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகம் சுற்றி திரிகின்றன.நாய்களால், அப்பகுதியில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும், இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது.மேலும் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டு சாலையில் அத்துமீறி ஓடுகின்றன. இதனால் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அச்சம் அடைகின்றனர்.நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வி.எஸ். சீனிவாசன்,செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !