உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொன்மார் ஊராட்சிக்கு குடிநீர் வசதி

பொன்மார் ஊராட்சிக்கு குடிநீர் வசதி

திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியம் பொன்மார் ஊராட்சிக்கு உட்பட்ட மலைத்தெருவில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு 10 ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை இருந்தது.இதையடுத்து, மக்கள் கோரிக்கையை ஏற்று, அப்பகுதியின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கிணறு அமைக்கப்பட்டது.மேலும், 27.25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில் குழாய்கள் அமைத்து, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதற்கான துவக்க விழா, நேற்று முன்தினம் ஊராட்சி தலைவர் நாராயணன் தலைமையில் நடந்தது. திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி