லாரி மீது கார் மோதி விபத்து இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுனர்
தாம்பரம்:புதுச்சேரியை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன், 35. நேற்று அதிகாலை, புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு, உறவினரை அழைத்துவர சென்று கொண்டிருந்தார்.அப்போது, தாம்பரம், காந்தி சாலை சிக்னலில், குரோம்பேட்டையில் இருந்து பழந்தண்டலம் பகுதிக்கு சென்ற டாரஸ் லாரி திரும்பிய லாரி மீது கார் வேகமாக மோதியது.இதில், காரின் முன்பகுதி நொறுங்கி, இடிபாடுகளில் சிக்கிய லட்சுமிகாந்தன், வெளியே வர முடியாமல் தவித்தார். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி, அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது தொடர்பாக, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, லாரி ஓட்டுனரான, கும்பகோணத்தை சேர்ந்த இளஞ்செழியன், 39, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.