உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பராமரிப்பற்ற வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சம்

பராமரிப்பற்ற வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்வதால் வாகன ஓட்டிகள் அச்சம்

பவுஞ்சூர், பவுஞ்சூரில், பராமரிப்பில்லாத வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். பவுஞ்சூரில், மதுராந்தகம் - கூவத்துார் இடையே செல்லும் 30 கி.மீ., மாநில நெடுஞ்சாலை உள்ளது. மதுராந்தகத்திலிருந்து பவுஞ்சூர், கடுகுப்பட்டு, நெல்வாய்பாளையம், கடலுார் கிராமம் போன்ற வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் சிறுவங்குணம், ஆக்கினாம்பட்டு, நெற்குணப்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களில், கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள், எம் - சாண்ட் ஏற்றிக்கொண்டு, 500க்கும் மேற்பட்ட லாரிகள் மதுராந்தகம், செங்கல்பட்டு, மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.அதிக பாரம் ஏற்றிச் செல்லும் இந்த தனியார் வாகனங்கள், முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாகனங்களின், 'டயர்'கள் சேதமடைந்து, அடிக்கடி 'பஞ்சர்' ஆவதால், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், இந்த வாகனங்கள் அதிவேகமாக செல்லும் போது, விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதிக பாரம் ஏற்றிச் செல்லும் பழுதடைந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை