உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஓட்டுநர் தினம் கிராமத்தினர் மரியாதை

ஓட்டுநர் தினம் கிராமத்தினர் மரியாதை

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெளியம்பாக்கம் ஊராட்சி உள்ளது. மதுராந்தகம் போக்குவரத்து பணிமனையில் இருந்து தடம் எண் : 12 ஏ பேருந்து ஆத்துார் சுங்கச்சாவடி, வெளியம்பாக்கம், கரசங்கால் வழியாக முருங்கை கிராமம் வரை செல்கிறது.நேற்று, ஓட்டுநர் தினத்தை ஒட்டி, வெளியம்பாக்கம் ஊராட்சி சார்பாக, ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து, அரசு பேருந்து ஓட்டுநர் ஹரிக்குமாருக்கு சால்வை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கவுரவித்தனர்.பூதுார் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், தடம் எண் : டி2 மதுராந்தகம் - - திருக்கழுக்குன்றம் செல்லும் பேருந்து ஓட்டுநருக்கு மரியாதை செலுத்தினார்.மதுராந்தகம் பேருந்து நிலையத்தில், 30க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து, மரியாதை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ