உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாரியில் திருட முயன்ற வாலிபர் போலீசில் ஒப்படைத்த டிரைவர்கள்

லாரியில் திருட முயன்ற வாலிபர் போலீசில் ஒப்படைத்த டிரைவர்கள்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, பாரேரி, திருத்தேரி, சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இப்பகுதிகளின் சாலை ஓரங்களில், இரவு நேரங்களில் சென்னையை நோக்கி செல்லும் தனியார் தொழிற்சாலை பேருந்துகள், சரக்கு வாகனங்களின் டிரைவர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்தி, ஓய்வு எடுப்பது வழக்கம்.இந்த பகுதியில், சில மாதங்களாக வாகனங்களில் வைக்கப்படும் மொபைல் போன், பணம் உள்ளிட்டவை, அடிக்கடி மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் இரவு, அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனியார் பேருந்தில், இரண்டு மர்ம நபர்கள் திருட முயன்றனர். இதைக்கண்ட சக டிரைவர்கள், இருவரையும் மடக்கி பிடிக்க முயன்றபோது, ஒருவர் தப்பினார். மற்றொரு நபர் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தின் அடியில் பதுங்கினார்.அந்த நபரை மடக்கி பிடித்த டிரைவர்கள், அவரிடம் விசாரித்த போது, அவர் வட மாநிலத்தை சேர்ந்த நபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த நபரை மறைமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.இது குறித்தான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை