உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சகோதரரை குத்தி வீட்டையும் எரித்த போதை வாலிபருக்கு வலை

சகோதரரை குத்தி வீட்டையும் எரித்த போதை வாலிபருக்கு வலை

திருப்போரூர்:திருப்போரூரில், மதுபோதையில் சகோதரரை பாட்டிலால் குத்திவிட்டு, குடிசை வீட்டையும் எரித்த வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர். திருப்போரூரை அடுத்த எடர்குன்றம் கிராமம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி தேவி, 50. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், மூன்றாவது மகன் ஜெகதீஷ், 22, குடிபோதையில், தாயிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதைப் பார்த்த இரண்டாவது மகன் சதீஷ், 25, தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், அங்கிருந்த காலி மதுபாட்டிலை உடைத்து, சதீஷின் கழுத்தில் குத்தி கிழித்துள்ளார். மேலும், குடிசை வீட்டையும் தீயிட்டு கொளுத்திவிட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார். இதில், குடிசை வீடு முழுதுமாக எரிந்து நாசமானது. அங்கிருந்தோர் காயமடைந்த சதீஷை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு கழுத்தில், 11 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெகதீசை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை