உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை புறநகரில் ஈசல் விற்பனை

செங்கை புறநகரில் ஈசல் விற்பனை

மறைமலைநகர்:வனப்பகுதியில் உள்ள புற்றிலிருந்து வெளிவரும் ஈசல்களை பிடிக்க, புறநகர் சுற்றியுள்ள கிராமத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மழைக்காலங்களில், இரவில் தெரு விளக்கை மொய்க்கும் பூச்சினங்களில் 'ஈசல்' முக்கியமானது.செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடி, ஆவணி புரட்டாசி மாதங்களில் உற்பத்தியாகிறது.புற்றிலிருக்கும் தாவர வகைகளை உட்கொண்டு, மழைக்காலங்களில் இரவு நேரங்களிலும், சூரிய உதய நேரங்களிலும் புற்றை விட்டு வெளியேறுகின்றன.இது புரதச்சத்து நிறைந்தது என்பதால், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில், மாலை நேர நொறுக்கு தீனியாக சாப்பிடுகின்றனர்.இது குறித்து ஈசல் பிடித்து வியாபாரம் செய்யும் பச்சையப்பன் கூறியதாவது:இரவு நேரத்தில் புற்றின் மீது குறிப்பிட்ட தாவரத்தை பொடியாக்கி, தூவி விட்டு அருகில் விளக்கு மற்றும் பாத்திரம் வைத்தால், அதில் ஈசல் வந்து விழும். ஒரு படி ஈசல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

God yes Godyes
ஆக 24, 2024 10:34

பாவம் புற்றீசல் கள் ஏண்டா உங்களுக்கு திண்றதுக்கு வேற எதுவும் கிடைக்க வில்லையா.கும்பல் கும்பலா கூடி நின்று அஞ்சுக்கும் பத்துக்கும் ஓட்டு போடறவனுங்க.


முக்கிய வீடியோ