உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படிக்கட்டிலிருந்து விழுந்த முதியவர் உயிரிழப்பு

படிக்கட்டிலிருந்து விழுந்த முதியவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு:படிக்கட்டில் ஏறிய போது தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த கேரள முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்,65. சமையல்காரர்.இவர், கடந்த எட்டு மாதங்களாக செங்கல்பட்டில் தங்கி, தனியார் நகைக்கடை கேன்டீனில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7ம் தேதி இரவு 8:00 மணியளவில், இவர் தங்கியிருந்த வீட்டின் படிக்கட்டில் ஏறிய போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உன்னிகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை