உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை விபத்தில் முதியவர் பலி

சாலை விபத்தில் முதியவர் பலி

மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த தைலாவரம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்,62. கோனாதி பகுதியிலுள்ள கோழிப் பண்ணையில் பணிபுரிந்து வந்தார்.நேற்று காலை பணிக்குச் செல், தன் 'டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்.' ஸ்கூட்டரில், தைலாவரம் சிக்னலில் சாலையைக் கடக்க முயன்றார்.அப்போது இவர் மீது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற விழுப்புரம் கோட்ட தடம் எண்.148 அரசு பேருந்து மோதியது.இதில், கிருஷ்ணன் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து வழக்கு பதிந்து, தப்பிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை