உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை விபத்தில் மூதாட்டி பலி

சாலை விபத்தில் மூதாட்டி பலி

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவிலில் வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார். சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் நேற்று காலை 65 வயது மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் மூதாட்டி உயிரிழந்தார். மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி