உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்

செங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு:கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கத்தில் நாளை, வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கீரப்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் நாளை, வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில், 18 வயது நிரம்பிய, 40 வயதுக்கு உட்பட்ட, எட்டாம் வகுப்பு முதல் பொறியியல் வரை படித்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். பங்கேற்கும் நபர்கள், சுய விபரக் குறிப்பு, கல்வி சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், இருப்பிட சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.தவிர, www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணைய முகவரியிலும், தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம்.இதில், 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று, 5,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு, உரிய நபர்களை தேர்வு செய்ய உள்ளன.கூடுதல் விபரங்களுக்கு 044 - -2742 6020 மற்றும் 94868 70577 / 93844 99848 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை