உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் இருந்து தச்சூர் வழியாக கல்பாக்கத்திற்கு பஸ் இயக்க எதிர்பார்ப்பு

மதுராந்தகத்தில் இருந்து தச்சூர் வழியாக கல்பாக்கத்திற்கு பஸ் இயக்க எதிர்பார்ப்பு

பவுஞ்சூர்:மதுராந்தகத்தில் இருந்து தச்சூர் வழியாக, கல்பாக்கத்திற்கு டவுன் பேருந்து இயக்க வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பவுஞ்சூர் அடுத்த நெல்வாய், சேவூர், தண்டரை, செம்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, ஏராளமான குழந்தைகள், இளைஞர்கள் பள்ளி, கல்லுாரி படிப்பிற்காக கல்பாக்கம் மற்றும் மதுராந்தகம் சென்று வருகின்றனர்.மேலும் ஏராளமானோர், கல்பாக்கத்தில் செயல்படும் அணுமின் நிலையம், மதுராந்தகம் பகுதியில் செயல்படும் வணிக வளாகங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.மதுராந்தகத்தில் இருந்து தச்சூர் வழியாக கல்பாக்கத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படாமல் உள்ளதால், பள்ளி மாணவ - மாணவியர், பொதுமக்கள் கல்பாக்கம் மற்றும் மதுராந்தகம் சென்று வர சிரமப்படுகின்றனர்.தேவாத்துார், வீராணகுன்னம், தச்சூர் வழியாக சீவாடி, புன்னமை, சேவூர், தண்டரை சென்று, கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தினால், 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கல்பாக்கம் மற்றும் மதுராந்தகம் செல்ல வசதியாக இருக்கும்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், மதுராந்தகத்தில் இருந்து தச்சூர் வழியாக, அணைக்கட்டு வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இடையில் இந்த பேருந்து நிறுத்தப்பட்டது. அந்த பேருந்தை மீண்டும், மதுராந்தகத்தில் இருந்து தச்சூர் வழியாக, கல்பாக்கத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை