செய்யூரில் நெற்களம் அமைக்க எதிர்பார்ப்பு
செய்யூர்:செய்யூர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். பெரிய ஏரி நீர்ப்பாசனம் வாயிலாக 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. இதில், அதிகளவில் நெல் பயிரிடப்படுகிறது.அறுவடை செய்யப்படும் நெற்பயிரை உலர்த்த களம் வசதி இல்லாததால், விவசாயிகள் நெல்லை சாலையில் உலர்த்தி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும், சாலையில் சிதறி அதிகளவில் நெற்பயிர் வீணாகிறது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் பகுதியில் நெற்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.