உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்திலிருந்து- மாமல்லபுரத்திற்கு நேரடி பேருந்துகள் இயக்க எதிர்பார்ப்பு

மதுராந்தகத்திலிருந்து- மாமல்லபுரத்திற்கு நேரடி பேருந்துகள் இயக்க எதிர்பார்ப்பு

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு, அரசு பேருந்துகள் இயக்க வேண்டுமென, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, 200க்கும் மேற்பட்ட கிராமப்புறப் பகுதிகளை உள்ளடக்கியது.மதுராந்தகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கீழ், 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூணாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.நாள்தோறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உட்பட, 5,000க்கும் மேற்பட்ட பயணியர், இந்த பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.மதுராந்தகத்தில் இருந்து திருக்கழுக்குன்றத்திற்கு, தடம் எண்: 'டி2' மற்றும் 'டி3' என, இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மதுராந்தகத்திலிருந்து திருக்கழுக்குன்றம் வழியாக, சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்கு, நேரடி பேருந்துகள் இயக்க வேண்டுமென, சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.தற்போது அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியர், மதுராந்தகத்திலிருந்து செங்கல்பட்டு சென்று, செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்திற்குச் சென்று வருகின்றனர்.கோடைக்காலம் என்பதால் பள்ளி, கல்லுாரி விடுமுறை காரணமாக, மாமல்லபுரத்திற்கு அதிகமாக சுற்றுலா பயணியர் செல்கின்றனர்.எனவே, மதுராந்தகத்திலிருந்து மாமல்லபுரத்திற்கு, நேரடி பேருந்துகள் இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி