உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொசு ஒழிப்பு பணிகள் தனியாருக்கு பணி நீட்டிப்பு

கொசு ஒழிப்பு பணிகள் தனியாருக்கு பணி நீட்டிப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், டெங்கு நோய் தடுப்பு பணிகளை செயல்படுத்த, தனியார் நிறுவனத்திற்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே.நகர், வேதாசலம் நகர், அழகேசன் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணாநகர் உள்ளிட்ட 33 வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில், கொசுப்புழு ஒழிப்பு பணியை மேற்கொள்ள, நிரந்தர பணியாளர்கள் நகராட்சியில் இல்லை.இதனால், கொசுப்புழு ஒழிப்பு பணியை செயல்படுத்த, வேலுார் தனியார் நிறுவனத்தின் மூலம், கொசு ஒழிப்பு பணியாளர்களை பணியமர்த்தி பணி செய்ய, கடந்த ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.இதன் ஒப்பந்த காலம், வரும் 28ம் தேதியுடன் முடிகிறது. இதனால், மார்ச் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை, 78 நாட்களுக்கு அதே நிறுவனம் பணியை மேற்கொள்ள, தினக்கூலி விகிதத்தில் பணி நீட்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நகரமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது என, நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை