உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஓ.எம்.ஆரில் ஒரே வளாகத்தில் 13 சேவையை பயன்படுத்தும் வசதி

 ஓ.எம்.ஆரில் ஒரே வளாகத்தில் 13 சேவையை பயன்படுத்தும் வசதி

மேட்டுக்குப்பம்: ஓ.எம்.ஆரில், 195வது வார்டு அலுவலக வளாகத்தில், 13 அரசு சேவைகள் ஒரே இடத்தில் அமையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ஓ.எம்.ஆர்., மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ளது. இப்பகுதியில் சேவைத்துறை சார்ந்த அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் உள்ளன. இதனால், பொதுமக்களுக்கு அரசு துறை சார்ந்த சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அனைத்து அரசு சேவை துறை சார்ந்த 13 அலுவலகங்களையும், 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட வார்டு அலுவலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மாநகராட்சி பொறியியல், சுகாதாரம், வரி வசூல், இ - சேவை, சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகம், ரேஷன் கடை, தீயணைப்பு நிலையம், நகர நலவாழ்வு மையம், அம்மா உணவகம் ஆகியவை, ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், மின்பொறியாளர் அலுவலகம், ஆதார் மையம், முதல்வர் மருந்தகம், மஞ்சள் பை வினியோகம் போன்ற சேவை துறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை, ஜன., மாதம் பயன்பாட்டிற்கு வரும் என, வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !