உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போலி தங்ககட்டி மோசடி தலைமறைவு நபர் கைது

போலி தங்ககட்டி மோசடி தலைமறைவு நபர் கைது

கானத்துார்:பாரிமுனை, சிண்டா சாகிப் தெருவை சேர்ந்தவர் சிராக்பிஜெயின், 31. இவர், தங்கம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம், துாத்துக்குடி மாவட்டம், கடம்பூரை சேர்ந்த லட்சுமணன், 49, என்பவர், தன்னிடம் ஒரு கிலோ தங்கம் இருப்பதாக கூறி உள்ளார். கடந்த அக்., 20ம் தேதி, இ.சி.ஆர்., கானத்துாரில் உள்ள ஒரு ேஹாட்டலில் இருவரும் சந்தித்தனர். அப்போது, லட்சுமணன், பார்சலில் இருந்த ஒரு தங்க கட்டியை எடுத்து காட்டி உள்ளார். அதை பரிசோதித்ததில், சுத்தமான தங்க கட்டி என தெரிந்தது. உடனே, சிராக்பிஜெயின், பார்சலை வாங்கி விட்டு, 76 லட்சம் ரூபாய் வழங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று பார்சலை பிரித்தபோது, அந்த தங்க கட்டிகளோடு மேலும் சில தங்க கட்டிகள் கொடுத்து அனுப்பினார். அவை அனைத்தும் போலி என தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி கானத்துார் போலீசார் விசாரித்தனர். தலைமறைவாக இருந்த லட்சுமணனை நேற்று, கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !