பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயி தற்கொலை
செய்யூர்:தர்ப்பூசணி விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் அதிகரித்து, விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.செய்யூர் அடுத்த மடையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், 35; விவசாயி.இவர், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், கடந்த 3 ஆண்டுகளாக தர்ப்பூசணி விவசாயம் செய்தார். இதற்கு உரிய விலை கிடைக்காமல், நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கடந்தாண்டு, 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தர்ப்பூசணி பயிரிட்டார். அறுவடை நேரத்தில் தர்ப்பூசணியில் ரசாயனம் கலப்படம் என சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலால், தர்ப்பூசணி விற்பனையாகாமல் வயலில் வீணாகியுள்ளது.இதனால், கடன் தொல்லையால் லோகநாதன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, லோகநாதன் தற்கொலை செய்து கொண்டார்.செய்யூர் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலை குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.