மேலும் செய்திகள்
காளை மாடுகள் மாயம்
20-Oct-2024
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே உள்ள பருக்கல் ஊராட்சியை சேர்ந்தவர் முத்துபாபு, 66. இவர், அப்பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.நேற்று, விவசாய இடுபொருள் வாங்குவதற்காக, அச்சிறுபாக்கத்தில் சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடந்த போது, எதிர்பாராதவிதமாக, சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த புதுச்சேரி அரசு பேருந்து, முத்துபாபு மீது மோதியது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், உயிரிழந்த முத்துபாபுவின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.பின், வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
20-Oct-2024