ஒரத்தியில் வார சந்தை விவசாயிகள் கோரிக்கை
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தி ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மிக முக்கிய தொழில்.இப்பகுதியில் விளையும் காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை, கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.ஒரத்தி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அச்சிறுபாக்கம் ஞாயிறு வார சந்தையில் வியாபாரம் செய்கின்றனர்.ஒரத்தி ஊராட்சியைச் சுற்றி உள்ள வடமணிப்பாக்கம், தின்னலுார், கீழ் அத்திவாக்கம், ராஜம்பாளையம், சென்னேரி போன்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அச்சிறுபாக்கம் வார சந்தைக்குச் சென்று, காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர்.எனவே ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஒரத்தி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காய்கறி சந்தை ஏற்படுத்த வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.