/   உள்ளூர் செய்திகள்   /  செங்கல்பட்டு  /    வில்லியம்பாக்கம் மழைநீர் கால்வாயை துார் வார விவசாயிகள் கோரிக்கை                      
வில்லியம்பாக்கம் மழைநீர் கால்வாயை துார் வார விவசாயிகள் கோரிக்கை
மறைமலை நகர்,வில்லியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள, மழைநீர் வடிகால்வாயை துார் வார வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வில்லியம்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராமத்தில் உள்ள முக்கிய மழைநீர் வடிகால்கள் துார் வாரப்படாமல் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால், மழைக்காலத்தில் மழைநீரை இந்த பகுதியில் உள்ள குளங்களில் சேமிக்க முடியாமல், நேரடியாக நீஞ்சல் மதகு கால்வாய் வழியாக பாலாற்றில் கலக்கிறது. இதன் காரணமாக, கோடை காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடுகிறது. எனவே, இந்த கிராமத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாயை முறையாக துார் வார, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.