உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரிகளை பராமரிக்க விவசாயிகள் கோரிக்கை

ஏரிகளை பராமரிக்க விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழைக்கு முன், ஏரிகளை பராமரிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம் ஆகிய தாலுகாவில், ஏரி, கிணறு பாசனம் மூலம், விவசாயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் 526 ஏரிகள் உள்ளன.இதில், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள ஏரிகளில் மதகு உடைப்பு, பாசன கால்வாய்கள் துார்ந்துள்ளதால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் முழுமையாக செல்ல முடியாத சூழல் உள்ளது.செய்யூர் தாலுகாவில், வன்னியநல்லுார் ஏரி மதகு உடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழைக்கு முன் அனைத்து ஏரிகளிலும் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'வடகிழக்கு பருவ மழைக்குள், மாவட்டத்தில் உள்ள ஏரிகள் பராமரிப்பு பணிகளின்போது, மதகுகள் சீரமைக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ