விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
மதுராந்தகம்: மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட செய்யூர் மற்றும் மதுராந்தகம் தாலுகா பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. மதுராந்தகம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.