உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை சாலையில் திடீர் பள்ளத்தால் அச்சம்

மாமல்லை சாலையில் திடீர் பள்ளத்தால் அச்சம்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், திருக்கழுக்குன்றம் சாலை பகுதியில், பஜனை கோவில் சந்திப்பு உள்ளது. இப்பகுதி உள்ளூர் வாகனங்கள், செங்கல்பட்டு, கல்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், இவ்வழியே கடந்து செல்கின்றன. அதனால், காலை, மாலையில் வாகன நெரிசல் அதிகம்.சந்திப்பின் பிரதான சாலை, காலை 11:00 மணியளவில் திடீரென சரிந்து உள்வாங்கி, மூன்றடி ஆழத்திற்கு அபாயகரமான பள்ளம் உருவானது.அப்போது வாகனம் எதுவும் அச்சாலையில் செல்லாததால், விபத்து தவிர்க்கப்பட்டது. அருகில் இருந்த கடைக்காரர்கள், அங்கு சாலை தடுப்பை வைத்தனர்.சாலையில் ஏற்பட்டுள்ள இப்பள்ளத்தை உடனடியாக மூடி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்