உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் திரியும் நாய்களால் அச்சம்

சாலையில் திரியும் நாய்களால் அச்சம்

பவுஞ்சூர்:பவுஞ்சூரில், சாலையில் திரியும் நாய்களால் விபத்துகள் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். பவுஞ்சூரில், மதுராந்தகம் - கூவத்துார் இடையே செல்லும் 30 கி.மீ., மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், பவுஞ்சூர் பகுதியில் அதிக அளவில், தெருநாய்கள் சாலையில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, பவுஞ்சூர் பஜார் பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதுடன், சண்டையிட்டு சாலையின் நடுவே ஓடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகத்திடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, விபத்து ஏற்படுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ