உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கெங்கதேவன்குப்பத்தில் தீப்பற்றி குடிசை நாசம்

கெங்கதேவன்குப்பத்தில் தீப்பற்றி குடிசை நாசம்

சூணாம்பேடு:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கெங்கதேவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 48; டிரைவர்.இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், வீட்டில் இருந்த கோழிகள் காணாமல் போனது குறித்து, வேல்முருகன் அக்கம் பக்கத்தில் கேட்ட போது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுதன், 25, என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து சுதன், பட்டாக்கத்தியைக் காட்டி வேல்முருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து வேல்முருகன், சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார்.இதற்கிடையே, இரவு 10:00 மணியளவில், வேல்முருகன் வசித்து வந்த குடிசை வீடு தீப்பற்றி எறிவதாக, அக்கம் பக்கத்தினர் மொபைல்போன் வாயிலாக இவருக்கு தகவல் தெரிவித்து, தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர்.ஆனால், தீ மளமளவென பரவி, குடிசை முழுதும் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள், பட்டா, பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முழுதும் எரிந்து நாசமாகின.தீ விபத்து குறித்து, சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.தீயில் எரிந்து நாசமான வீட்டை, செய்யூர் தாசில்தார் சரவணன் நேற்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வேட்டி - சேலை மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை